சிட்டுக்குருவிகளின் காவலன்

இவர் பெயர் பாண்டியராஜன், இவர் கோயம்புத்தூர் போத்தனூரில் வசிக்கிறார், இவர் தனது நண்பர்களுடன் இனைந்து  "சிட்டுக்குருவி காப்பு இயக்கம்" என்ற அமைப்பை நடத்தி வருகிறார், இந்த அமைப்பில் 15 பேர் வரை இருக்கிறார்கள் இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளை காக்க முயன்று வருகிறார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலேயே தங்கள் லேத்திலேயே சிறு துளையுடன் கூடிய, குருவிகள் கூடு கட்டி வசிக்கும் அளவிற்கு சிறிய சிறிய மரபெட்டிகள் செய்து அதை அந்த ஊரில் சுற்றியிருக்கும் கடைகளின் மேல்புறத்திலும், வீடுகளிலும் (உரிமையாளர் அனுமதியுடன்) பொருத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் கூடு கட்ட இடமின்றி தவிக்கும் சிட்டு குருவிகளுக்கு கூடு அமைத்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுகிறார்கள். இதனால்
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

அவர்கள் ஆங்காங்கே வைத்துள்ள பெட்டிகளில் சிட்டுக்குருவிகள் வருவதும் போவதுமாய் இருப்பதை  நானும் கண்டேன்

அவர்களின் பணி சிறப்புற நமது "Local Paper" சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்

உண்மையாகவே குருவிகள் வளர்க்கும் ஆர்வம் இருக்கும் அன்பர்கள் பெட்டிகள் தொடர்பாக இவரை தொடர்பு கொள்ள : 994385090

சிம்மக்கல் பாட்டிம்மா

மதுரையில சிம்மக்கல் ஏரியாவுல வசித்து வரும் பாட்டிம்மா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிட்டு இருக்காங்க
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நாளடைவுல இவங்க செய்றத கேள்விப்பட்டு நிறைய நல்ல உள்ளங்கள் உதவுறனால இன்னைக்கு வரைக்கும் இதை கைவிடாம செஞ்சுட்டு இருக்காங்க


காலைல பாட்டிம்மா வருகைக்காக அங்க, ஏழை எளியவர்கள், வயதானவர்கள், இயலாதவர்கள், யாசகர்கள் னு  எல்லோரும் காத்துகிட்டு இருகாங்க, பாட்டிம்மாவை கண்ட உடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது, அதைவிட அவர்கள் பசியாறிய பிறகு அடையும் மகிழ்ச்சியும் மிக பெரியது

ஒரு பந்தி முடிந்த உடன் அடுத்த பந்தி ஆரம்பிகிறது இப்படியாக நான்கைந்து பந்திகள் வரை நடக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 60 பேர் வரை சாப்பிடுகிறார்கள்

எல்லோரும் உண்டு மகிழ்ந்து விடை பெரும் சமயம் அவர்கள் பாட்டிம்மாவை நோக்கி இரு கையெடுத்து வணங்கும் போது பாட்டிம்மா ஆனந்தத்தில் புரிப்படைகிறார் "அதைவிட வேறு சந்தோசமே இல்லைன்னு சொல்றாங்க பாட்டிம்மா

என்னதான் நிறைய பேரு உதவுனாலும் அதை எடுத்து செய்ய ஒரு மனசு வேணும் இல்லையா அது இந்த பாட்டிம்மா கிட்ட நிறையவே இருக்கு

மனசார வாழ்த்துவோம் பாட்டிம்மாவ...

இந்த சேவையை எப்போ ஆரம்பிச்சாங்க, எப்படி ஆரம்பிச்சாங்க என்பதை அறிய....காணுங்கள் வீடியோ பதிவை....

Local Paper


வணக்கம்

ஒவ்வொரு துறையிலும் சாதாரண ஆனால் தன் தனித்தன்மையாலும் புதிய சிந்தனையாலும் சாதனை படைத்த மனிதர்களை கண்டறிந்து அவர்கள் வெற்றி பெற்ற விதம் குறித்து இவ்வுலகிற்கு தெரியபடுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த "Local Paper" மேலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம, பிரதிபலன் பாராம தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற சுயநலமற்ற தன்னார்வலர்களின் தொகுப்பு தான் இந்த "Local Paper"

இதன் வீடியோ பதிவை காண.....