515 கணேசன்

புதுகோட்டை அருகே ஆலங்குடியில் வசிக்கும் இவர் பெயர் 515 கணேசன். அதென்ன  515னு நீங்க கேப்பீங்க, அதுக்கு என்ன காரணம்னு பார்பதற்கு முன் இவரை பற்றி தெரிந்து கொள்வோம். இவர் பல வருடங்களாக இலவச அவசர ஊர்தி (ambulance) சேவையை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகிறார். அதாவது, கர்ப்பிணி பெண்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, விபத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்று எப்பொழுதும் பரபரப்பாகவே உள்ளார். ஆனால் இதெற்கெல்லாம் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே செய்து வருகிறார்.


இலவச ஆம்புலன்ஸ் சேவை (108) வருவதற்கு முன் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அவசர வாகன தேவைக்கு இவரையே நாடி வந்துள்ளனர்.
108 வருகைக்கு பிறகு மக்கள் தன்னை நாடி வருவது குறைந்துள்ளதாக கூறுகிறார். ஆனாலும் உதவி தேவை படுபவர்களை தேடி சென்று உதவுகிறார். எவ்வளவு தூரம் என்றாலும் செலவே இல்லாமல் அழைத்து செல்கிறார். "நான் யாரிடமும் இதுவரை எதுவும் கேட்டதில்லை, அவர்களாக விருப்பபட்டு எதாவது கொடுத்தால் வாங்கி கொள்வேன், யாரையும் வற்புறுத்தியது கிடையாது" என்று வெள்ளந்தியாக சொல்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில், புதுகோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர தேவைக்கு வாகனம் இல்லாமலும், வாகனம் இருந்தாலும் அதற்குரிய பணம் கொடுக்க முடியாமலும் மக்கள் கஷ்டபடுவதை கண்டு மனம் வேதனை அடைந்துள்ளார்.,அதுவே இச்சேவையை தொடங்க காரணம் என்றும் சொல்கிறார். அவர்கள் கஷ்டத்தை போக்கும் விதமாக தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் போட்டு தானே ஒரு அம்பாசிடர் கார் வாங்கி  அதை அவசர ஊர்தியாக (ambulance) மாற்றி இன்று வரை 47 வருடங்களாக இந்த சேவையை செய்து வருகிறார்.

பெயர் காரணம்:
அன்று இவர் முதன்முதலில் வாங்கிய அம்பாசிடர் காரின் நம்பர் TMZ 515. பிற்காலங்களில் பல நம்பர்களில் பல கார்கள் வாங்கினாலும் 515 நம்பரே இவரது அடையாளமாக போனது

இவர் பல்லாண்டு வாழ்ந்து இச்சேவையை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்ய வாழ்த்துவோமாக...

நல்லவங்க இன்னும் இந்த பூமியில் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க....

இவரது வயது என்ன தெரியுமா...காணுங்கள் வீடியோ பதிவை.....

சிட்டுக்குருவிகளின் காவலன்

இவர் பெயர் பாண்டியராஜன், இவர் கோயம்புத்தூர் போத்தனூரில் வசிக்கிறார், இவர் தனது நண்பர்களுடன் இனைந்து  "சிட்டுக்குருவி காப்பு இயக்கம்" என்ற அமைப்பை நடத்தி வருகிறார், இந்த அமைப்பில் 15 பேர் வரை இருக்கிறார்கள் இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளை காக்க முயன்று வருகிறார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலேயே தங்கள் லேத்திலேயே சிறு துளையுடன் கூடிய, குருவிகள் கூடு கட்டி வசிக்கும் அளவிற்கு சிறிய சிறிய மரபெட்டிகள் செய்து அதை அந்த ஊரில் சுற்றியிருக்கும் கடைகளின் மேல்புறத்திலும், வீடுகளிலும் (உரிமையாளர் அனுமதியுடன்) பொருத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் கூடு கட்ட இடமின்றி தவிக்கும் சிட்டு குருவிகளுக்கு கூடு அமைத்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுகிறார்கள். இதனால்
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

அவர்கள் ஆங்காங்கே வைத்துள்ள பெட்டிகளில் சிட்டுக்குருவிகள் வருவதும் போவதுமாய் இருப்பதை  நானும் கண்டேன்

அவர்களின் பணி சிறப்புற நமது "Local Paper" சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்

உண்மையாகவே குருவிகள் வளர்க்கும் ஆர்வம் இருக்கும் அன்பர்கள் பெட்டிகள் தொடர்பாக இவரை தொடர்பு கொள்ள : 994385090

சிம்மக்கல் பாட்டிம்மா

மதுரையில சிம்மக்கல் ஏரியாவுல வசித்து வரும் பாட்டிம்மா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிட்டு இருக்காங்க
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நாளடைவுல இவங்க செய்றத கேள்விப்பட்டு நிறைய நல்ல உள்ளங்கள் உதவுறனால இன்னைக்கு வரைக்கும் இதை கைவிடாம செஞ்சுட்டு இருக்காங்க


காலைல பாட்டிம்மா வருகைக்காக அங்க, ஏழை எளியவர்கள், வயதானவர்கள், இயலாதவர்கள், யாசகர்கள் னு  எல்லோரும் காத்துகிட்டு இருகாங்க, பாட்டிம்மாவை கண்ட உடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது, அதைவிட அவர்கள் பசியாறிய பிறகு அடையும் மகிழ்ச்சியும் மிக பெரியது

ஒரு பந்தி முடிந்த உடன் அடுத்த பந்தி ஆரம்பிகிறது இப்படியாக நான்கைந்து பந்திகள் வரை நடக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 60 பேர் வரை சாப்பிடுகிறார்கள்

எல்லோரும் உண்டு மகிழ்ந்து விடை பெரும் சமயம் அவர்கள் பாட்டிம்மாவை நோக்கி இரு கையெடுத்து வணங்கும் போது பாட்டிம்மா ஆனந்தத்தில் புரிப்படைகிறார் "அதைவிட வேறு சந்தோசமே இல்லைன்னு சொல்றாங்க பாட்டிம்மா

என்னதான் நிறைய பேரு உதவுனாலும் அதை எடுத்து செய்ய ஒரு மனசு வேணும் இல்லையா அது இந்த பாட்டிம்மா கிட்ட நிறையவே இருக்கு

மனசார வாழ்த்துவோம் பாட்டிம்மாவ...

இந்த சேவையை எப்போ ஆரம்பிச்சாங்க, எப்படி ஆரம்பிச்சாங்க என்பதை அறிய....காணுங்கள் வீடியோ பதிவை....

Local Paper


வணக்கம்

ஒவ்வொரு துறையிலும் சாதாரண ஆனால் தன் தனித்தன்மையாலும் புதிய சிந்தனையாலும் சாதனை படைத்த மனிதர்களை கண்டறிந்து அவர்கள் வெற்றி பெற்ற விதம் குறித்து இவ்வுலகிற்கு தெரியபடுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த "Local Paper" மேலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம, பிரதிபலன் பாராம தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற சுயநலமற்ற தன்னார்வலர்களின் தொகுப்பு தான் இந்த "Local Paper"

இதன் வீடியோ பதிவை காண.....