புதுகோட்டை அருகே ஆலங்குடியில் வசிக்கும் இவர் பெயர் 515 கணேசன். அதென்ன 515னு நீங்க கேப்பீங்க, அதுக்கு என்ன காரணம்னு பார்பதற்கு முன் இவரை பற்றி தெரிந்து கொள்வோம். இவர் பல வருடங்களாக இலவச அவசர ஊர்தி (ambulance) சேவையை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகிறார். அதாவது, கர்ப்பிணி பெண்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, விபத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்று எப்பொழுதும் பரபரப்பாகவே உள்ளார். ஆனால் இதெற்கெல்லாம் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே செய்து வருகிறார்.
இலவச ஆம்புலன்ஸ் சேவை (108) வருவதற்கு முன் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அவசர வாகன தேவைக்கு இவரையே நாடி வந்துள்ளனர்.
108 வருகைக்கு பிறகு மக்கள் தன்னை நாடி வருவது குறைந்துள்ளதாக கூறுகிறார். ஆனாலும் உதவி தேவை படுபவர்களை தேடி சென்று உதவுகிறார். எவ்வளவு தூரம் என்றாலும் செலவே இல்லாமல் அழைத்து செல்கிறார். "நான் யாரிடமும் இதுவரை எதுவும் கேட்டதில்லை, அவர்களாக விருப்பபட்டு எதாவது கொடுத்தால் வாங்கி கொள்வேன், யாரையும் வற்புறுத்தியது கிடையாது" என்று வெள்ளந்தியாக சொல்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில், புதுகோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர தேவைக்கு வாகனம் இல்லாமலும், வாகனம் இருந்தாலும் அதற்குரிய பணம் கொடுக்க முடியாமலும் மக்கள் கஷ்டபடுவதை கண்டு மனம் வேதனை அடைந்துள்ளார்.,அதுவே இச்சேவையை தொடங்க காரணம் என்றும் சொல்கிறார். அவர்கள் கஷ்டத்தை போக்கும் விதமாக தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் போட்டு தானே ஒரு அம்பாசிடர் கார் வாங்கி அதை அவசர ஊர்தியாக (ambulance) மாற்றி இன்று வரை 47 வருடங்களாக இந்த சேவையை செய்து வருகிறார்.
பெயர் காரணம்:
அன்று இவர் முதன்முதலில் வாங்கிய அம்பாசிடர் காரின் நம்பர் TMZ 515. பிற்காலங்களில் பல நம்பர்களில் பல கார்கள் வாங்கினாலும் 515 நம்பரே இவரது அடையாளமாக போனது
இவர் பல்லாண்டு வாழ்ந்து இச்சேவையை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்ய வாழ்த்துவோமாக...
நல்லவங்க இன்னும் இந்த பூமியில் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க....
இவரது வயது என்ன தெரியுமா...காணுங்கள் வீடியோ பதிவை.....